Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பரிசை வந்து வாங்கிக்கோங்க.. போனில் அழைக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்..!

Siva
வெள்ளி, 24 ஜனவரி 2025 (09:08 IST)
இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பை லட்சக்கணக்கான பொதுமக்கள் வாங்காத நிலையில் நேரில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு ரேஷன் கடை ஊழியர்கள் போனில் அழைப்பு விடுத்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்தது. ஆனால் அதே நேரத்தில் இந்த ஆண்டு ரொக்கம் இல்லை என்ற அறிவிப்பு காரணமாக ஏராளமான பொங்கல் பரிசை வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுவரை மொத்தம் 1.87 கோடி பேர் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி இருக்கும் நிலையில் நாளை வரை இந்த பரிசுத் தொகுப்பை வாங்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை இதுவரை வாங்காதவர்களை ரேஷன் கடை ஊழியர்கள் மொபைல் போனில் தொடர்பு கொண்டு வந்து வாங்கிச் செல்லுமாறு கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு பரிசு தொகுப்பை பலர் வாங்காததால் வாங்காதவர் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட அதிகமாக இருப்பதாகவும் அதனால் அதிகம் பேர் வாங்கியதாக கணக்கு காட்ட போனில் அழைப்பு கொடுத்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இருப்பினும் போனில் அழைப்பு பெற்ற பொதுமக்கள் ஒரு சிலர் மட்டுமே வந்து வாங்குவதாகவும் மற்றவர்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments