மாநகராட்சி ஊழியர்கள் கழிவுநீர் இறைக்க வைத்திருந்த மோட்டாரை எடுத்துச் சென்றதற்கு கூட்டத்தில் புகார்
, செவ்வாய், 22 அக்டோபர் 2024 (11:35 IST)
சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70-வது வார்டுகளிலும் எந்த பணிகளும் நடைபெற உள்ள என அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த குரல் எழுப்பினர்.
பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் தலைமையில் இந்த மாமன்ற கூட்டத்தில் இதுவரை எந்த ஒரு மக்கள் நல பணி திட்டங்களும் நடை பெறவில்லை எனவும், ஒவ்வொரு கூட்டத்திலும் மக்களின் குரலாக நாங்கள் எடுத்துரைத்தும் எந்த ஒரு பதிலும் இல்லாமல் இருக்கின்றது,
தற்பொழுது நடைபெறுகிற கூட்டம் தீபாவளி வருமானத்திற்கான கூட்டம் என கோஷம் எழுப்பி மாநகராட்சியை கண்டித்தும், மாமன்ற கூட்டத்தை புறக்கணித்து.
எதிர்க்கட்சி அதிமுக உறுப்பினர் சேலையூர் சங்கர் தலைமையில் 10,மாமன்ற உறுப்பினர்கள்
வெளி நடப்பு செய்தனர்,
மாநகராட்சி பகுதியில் கிருமி நாசிகள் தெளிப்பதில் மோசடி நடப்பதாக கையில் பிளிச்சிங் பவுடரை வைத்துக்கொண்டு வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
அடுத்த கட்டுரையில்