Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுக்கு ஜெயலலிதா போன்ற சர்வாதிகார தலைவர் வேண்டும்: மருது அழகுராஜ்

Mahendran
திங்கள், 17 மார்ச் 2025 (11:15 IST)
அதிமுகவுக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற சர்வாதிகார ஜனநாயக தலைவர்தான் வேண்டும், வெறும் ஜனநாயக தலைவர் தேவையில்லை என்று அதிமுக மூத்த தலைவர் மருது அழகராஜ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அதிமுக மூத்த தலைவர் மற்றும் நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகராஜ், அதிமுகவுக்கு சர்வாதிகார ஜனநாயகம் தான் பொருந்தும், ஜனநாயகம் பொருந்தாது என்று கூறியுள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற சர்வாதிகார தலைமை இல்லாததுதான் அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவுகளுக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், அதிமுகவின் அதிருப்தி தலைவராக மாறியுள்ள செங்கோட்டையனை சமாதானப்படுத்த, தங்கமணி, ஏழுமணி, கே.பி. முனுசாமி, கடம்பூர் ராஜூ ஆகியோர் அவருடன் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
கடந்த சில நாட்களாக, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அதிமுக கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்காமல் உள்ளார். இதனால், அவர்  கட்சியிலிருந்து வெளியேறி விடுவாரா? அல்லது தனியாக ஒரு கட்சி தொடங்குவாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
 
அவரை சமாதானப்படுத்த தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை சர்வாதிகாரம் கொண்டதல்ல என்று மருது அழகராஜ் கூறியது, பல அதிமுக தொண்டர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments