Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் கட்சிக்கு அழைப்பில்லை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிராக ஐகோர்ட்டில் மனு..!

Mahendran
திங்கள், 3 மார்ச் 2025 (13:36 IST)
அனைத்து கட்சி கூட்டத்திற்கு எங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ரவி மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், அனைத்து கட்சி கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில், எந்த தேர்தலிலும் களம் காணாத பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது பாரபட்சமானது என்றும் ரவி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
 
மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்படும் விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். நாளை மறுநாள், மார்ச் 5ஆம் தேதி, இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
 
பாஜக, தமிழக வெற்றிக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தங்களுடைய கட்சிக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி மனு தாக்கல் செய்திருப்பது கவனத்தைக் கேட்கிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments