Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா ரஞ்சித் கைது தடை நீட்டிப்பு இல்லை – நீதிமன்றம் அறிவிப்பு !

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (17:01 IST)
ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய விதமாகப் பேசிய இயக்குனர் பா ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை நீட்டிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்பொது பேசிய ரஞ்சித் மன்னர் ராஜ ராஜ சோழன் காலத்தில்தான் தலித் மக்களின் நிலம் பறிக்கப்பட்டதாகவும் 400க்கும் மேற்பட்ட பெண்கள் தேவதாசிகளாக மாற கட்டாயப்படுத்த பட்டதாகவும் கடுமையான விமர்சித்தார். பா. ரஞ்சித்தின் இந்தப் பேச்சுக்கு  சமுக வலைதளங்களிலும் ஆதரவும் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. ரஞ்சித்தின் பேச்சுக்கு இந்து அமைப்புகளும் இந்து மத அபிமானிகளும் வன்மையாகக் கண்டனம் தெரிவித்து அவரைக் கைது செய்ய வேண்டும் எனக் குரல் எழுப்பினர்.

ரஞ்சித்தின் இந்தப்பேச்சை எதிர்த்து திருப்பனந்தாள் போலீஸ் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது. இதனால் எந்த நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவானது. இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் கோரி ரஞ்சித் மனுத்தாக்கல் செய்தார். இதனை ஏற்று விசாரித்த நீதிபதி ரஞ்சித்தைக் கைது செய்ய இன்றுவரை தடை விதித்தார். அதையடுத்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பா ரஞ்சித்துக்கு ஆதரவாக தன்னையும் மனுதாரராக சேர்த்துக்கொள்ள வழக்கறிஞர் ரஜினி வாதிட்டார். மேலும் இந்த வழக்கில் கால அவகாசம் வேண்டும் எனவும் அதுவரை தன்னைக் கைது செய்ய தடை நீட்டிக்க வேண்டும் என ரஞ்சித் தரப்பில் வாதிடப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள் கால அவகாசம் வழங்கியும் கைதுக்கான தடையை நீக்க முடியாது எனவும் உத்தரவிட்டுள்ளனர். இதனால் ரஞ்சித் கைது செய்யப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments