Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கந்துவட்டி கொடுமையால் காவலர் தற்கொலை! – கடலூரில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (12:49 IST)
கடலூரில் கந்துவட்டி கொடுமையால் காவலரே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் உளுந்தூர்பேட்டை பட்டாலியனில் ஆயுதப்படை காவலராக பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 2020ம் ஆண்டு குடும்ப தேவைக்காக அந்த பகுதியில் வட்டிக்கு பணம் தரும் பெண் ஒருவரிடன் ரூ.5 லட்சம் வாங்கியுள்ளார். பின்னர் அதை 2 தவணைகளாக செலுத்தியும் உள்ளார்.

ஆனால் அவர் வாங்கிய கடன் தற்போது வட்டியுடன் 12 லட்ச ரூபாய் தர வேண்டும் என அந்த பெண் கூறியுள்ளார். மேலும் பணத்தை தராவிட்டால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து புகார் எழுதிய செல்வகுமார் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அதை கொடுக்க சென்றபோது மயங்கி விழுந்துள்ளார்.

அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் விஷம் அருந்தியதால் இறந்து விட்டது தெரிய வந்துள்ளது. கந்துவட்டி கொடுமையால் காவலரே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments