Publish Date: Mon, 21 Feb 2022 (22:02 IST)
Updated Date: Mon, 21 Feb 2022 (22:05 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 788 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,45, 717 பேராக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 2,692 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 33,93, 703 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 01 ஆகும், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,981 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், சென்னையில் இன்று 191 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 7,48,999 பேராக அதிகரித்துள்ளது.
தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 18,164 ஆக அதிகரித்துள்ளது.