தஹில் ரமானியை சட்டத்துறை அமைச்சர் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பினார். இந்நிலையில் சட்டத்துறை அமைசர் சி.வி.சண்முகம், தஹீல் ரமானியை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தஹில் ரமானி தனது ராஜினாமா முடிவை கைவிட வேண்டும் எனவும் அமைச்சர் சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 75 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை இல்ல்லை எனவும், இந்த வழக்குகளில் 13 வழக்குகளை 2 அமர்வில் வினித் கோத்தாரி, சி,சண்முகம் ஆகிய நீதிபதிகள் விசாரிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.