ஈரோடு தொகுதி முழுவதும் திமுகவினர் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி சண்முகம் குற்றம் சாட்டி உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் திமுகவினர் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தேர்தல் அதிகாரிகளும் காவல்துறையினரும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்றும் அனைத்து கட்சிக்கும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கும் உரிமை உண்டு என்றும் ஆனால் இந்த ஜனநாயக உரிமை எதிர்க்கட்சிகளுக்கு பறிக்கப்படுவதாகவும் செய்தியாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க திமுகவின் தேர்தல் பிரிவாக செயல்படுகிறது என்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் முறைகேடுகளை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் சார்பாக இரண்டு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர் என்றும் ஆனால் அவர்கள் எங்கே இருக்கின்றனர் என்று தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பூத்துக்கும் திமுகவினர் சென்று வாக்காளர்களுக்கு மூன்று வேலை உணவு கொடுத்து ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.