Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிக்ஜாம் புயல் எதிரொலி: அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு- அண்ணா பல்கலை

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2023 (15:30 IST)
சென்னை பல்கலை மற்றும் அதன் கீழ் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் நாளை (டிசம்பர் ) நடைபெறவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள சாலைகள் வெள்ளக்காடான நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தீவிர புயலாக வலுவடைந்துள்ள மிக்ஜாம் தற்போது சென்னைக்கு 90 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இனறிரவு வரை 60 கிமீ வேகத்தில் மிக்ஜாம் பியல் வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை பல்கலை மற்றும் அதன் கீழ் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் நாளை ( டிசம்பர் ) நடைபெறவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மிக்ஜாம் புயல் காரணமாக நாளை முதல் வரும் சனிக்கிழமை ( டிசம்பர் 9) வரை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தொலைதூர கல்வி இயக்ககம் மற்றும் நேரடி கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள்  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இன்று அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் (டிசம்பர்  5 ஆம் தேதி செவ்வாய்கிழமை )பள்ளி, கல்லூரி,  அரசு அலுவலகங்களுக்கு  பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments