Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருத்தணி முருகன் கோயிலில் தரிசன கட்டணம் குறைப்பு.! காவடி கட்டணமும் ரத்து..!!

Senthil Velan
வெள்ளி, 26 ஜூலை 2024 (12:01 IST)
திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படி திருவிழா நாட்களில் சிறப்பு வழி தரிசன கட்டணம் ரூ.200/- லிருந்து ரூ.100/- ஆக குறைக்கப்பட்டுள்ளது.
 
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோயிலில் (ஜூலை 27) நாளை முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை ஆடிக்கிருத்திகை விழா மற்றும் 3 நாள் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது.    

இந்த விழாவில் 2 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட பக்தர்கள்  பங்கேற்று முருகப்பெருமானுக்கு காவடிகள் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுவதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 
மேலும் பக்தர்கள்  தடையின்றி சாமி தரிசனம் செய்யவும்,  தூய்மை, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், தற்காலிக பேருந்து நிலையங்கள், மருத்துவ முகாம்கள், கழிவறைகள், மின் விளக்குகள், பக்தர்கள் தங்கும் அறைகள், போக்குவரத்து உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
 
இந்நிலையில்  திருத்தணி முருகன் கோவிலில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு, கோவிலுக்கு காவடிகள் எடுத்து வரும் பக்தர்களிடம் காவடி கட்டணம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்.

ALSO READ: மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் எப்போது நிறைவடையும்.? நிதின் கட்கரி முக்கிய அப்டேட்.!
 
ஆடி கிருத்திகையை முன்னிட்டு  சிறப்பு வழி தரிசன கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ.100ஆக குறைக்கப்படும் என்றும்  திருப்படி திருவிழா நடைபெறும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளிலும் சிறப்பு வழி தரிசனம் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments