அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து விவாதம் செய்ய தயாரா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்த நிலையில் அந்த சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி நான் முதல்வராக இருந்த காலத்தில் என்னென்ன சாதனைகள் செய்தேன் என்ற புள்ளி விவரத்தோடு துண்டு சீட்டு இல்லாமல் நான் பேச தயார் என கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தார் என்று அவர் என்னிடம் விவாதிக்க தயாரா என சவால் விடுத்திருந்தார்.
இந்த சவால் குறித்த கேள்விக்கு துணை முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்த போது எடப்பாடி பழனிச்சாமி என்னை அழைத்தால் நான் விவாதத்தில் பங்கேற்க தயார் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு எடப்பாடி பழனிச்சாமி என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.