Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்டா கோவிட்....இணையதளத்தில் டிரெண்டிங்

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (22:44 IST)
இந்தியாவில் 22 பேர்  இந்த டெல்டா பிளஸ்  வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர் என மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்த மீம்ஸ் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரண்டாம் அலை கொரோனா அதிகளவில் பரவ இந்தியாவில் உறுமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா வைரஸே காரணம் என வல்லுனர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 554 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 386 பேருக்கு டெல்டா கொரோனா வைரஸ் பரவியது தெரிய வந்துள்ளது. மொத்த பரிசோதனையில் இது 75%க்கும் அதிகம் என்றும், இதில் அதிகம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதனிடையே டெல்டாவில் இருந்து டெல்டா பிளஸ் வைரஸ் உருமாறியுள்ளது. இந்த வைரஸ் உலக நாடுகளில் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் 22 பேர் இந்த வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர். ஆம், மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

தற்போது இதுகுறித்த மீம்ஸ்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. வழக்கம் போலவே இத்தொற்றும் குறைய வேண்டுமென மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
.


























தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments