Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: எந்தெந்த பகுதிகளில் கனமழை பெய்யும்?

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (08:05 IST)
நாளை வங்க கடலில் புதிய காற்றழுத்தம் உருவாக இருப்பதை அடுத்து தமிழகத்தில் உள்ள சில பகுதிகள் மற்றும் புதுவையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
நாளை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகுவதை அடுத்து நாளை முதல் ஜூன் 13-ஆம் தேதி வரை வங்க கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் குறிப்பாக மன்னார் வளைகுடா அந்தமான் கடல் பகுதிகளில் மிக வேகமான காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது 
 
மேலும் தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு வெப்ப சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு என்றும் புதுவை காரைக்கால் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் கடலோரத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments