Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“நாங்கள் வாக்களிக்கமாட்டோம்”.. தேர்தலை புறக்கணித்தனர் தேவேந்திரகுல வேளாளர்கள்

Arun Prasath
திங்கள், 21 அக்டோபர் 2019 (12:18 IST)
நாங்குநேரி தொகுதியில் தேவேந்திர குல சமுதாய மக்கள் இடைத்தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் இன்று சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றுவருவதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் நாங்குநேரி தொகுதியில் தேவேந்திர குல சமூகத்தை சேர்ந்தவர்கள் இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதன் படி, நாங்குநேரி கீழப்பாட்டம் பகுதியில் உள்ள தேவேந்திர குல சமூகத்தினர் ஓட்டுபோடவில்லை என தெரியவருகிறது. மேலும் அரிய குளம், உன்னங்குளம், கல்லத்தி ஆகிய பகுதிகளில் அச்சமூக மக்கள் ஓட்டுபோடவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஆனால் களக்காடு, தருவை ஆகிய பகுதிகளில் பெருமளவு தேவேந்திர குல சமுதாயத்தினர் ஓட்டு போட்டதாகவும் தெரியவருகிறது. இதனால் நாங்குநேரி பகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளிலும் மிகவும் குறைந்த அளவே வாக்குப்பதிவு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

பட்டியல் இனத்திலுள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றினைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவித்து அரசாணை வெளியிடவேண்டும் என வலியுறுத்தி நாங்குநேரி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments