Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் படத்தின் மோஷன் போஸ்டரை கொண்டாடிய மூவர்: அள்ளிச்சென்ற காவல்துறை

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (07:40 IST)
நடிகர் தனுஷ் நடிக்கும் ’ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டதை கொண்டாடும் விதமாக தனுஷ் ரசிகர் செய்த ஒரு காரியத்தால் அவரை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜகமே தந்திரம். படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானதை அடுத்து நெல்லை உடையார்பட்டி என்ற பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றில் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்வக்கோளாறில் தனுஷ் ரசிகரான செந்தில் என்பவர் மூன்று அடி நீள பட்டாக்கத்தி கொண்டு திரையரங்கு முன்னாள் கேக் வெட்ட முயன்றார். அப்போது அங்கு காவலுக்கு இருந்த காவல்துறையினர் செந்தில் மற்றும் மேலும் இரண்டு பேர்களை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
 
கடந்த சில ஆண்டுகளாக பிறந்த நாளின்போது ரெளடிகள் சிலர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டும் கலாச்சாரம் ஏற்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற பட்டாகத்தி கலாச்சாரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரெளடிகள் மட்டுமின்றி மாணவர்களிடையேயும் இந்த பட்டாக்கத்தி கலாச்சாரம் ஏற்பட்டு வருகிறது என்பது வேதனைக்குரிய ஒரு விஷயம் ஆகும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அமைச்சரின் வருகையின் போது GOBACK சொன்ன திமுக நிர்வாகிகள்.. திமுக தலைமை நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments