Publish Date: Mon, 26 Oct 2026 (12:54 IST)
Updated Date: Mon, 26 Oct 2026 (13:02 IST)
நடிகர் தனுஷ் 2028ம் வருடம் தனது அரசியல் கட்சியை தொடங்கி 2031 சட்டமன்ற தேர்தலை குறிவைத்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் நேற்று செம்மஞ்சேரியில் தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை தனுஷ் சந்தித்து அவர்கள் முன்பு அரசியல் பேசியிருக்கிறார். அதோடு, 3 ஆயிரம் பெண் நிர்வாகிகளுக்கு வெள்ளி காமாட்சி விளக்கையும் தனுஷ் பரிசளித்துள்ளார். அந்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது ஒருபக்கம் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், நற்பணி இயக்க மகளிரணிக்கு பரிசு வழங்க ரூ.1.5 கோடி தனுஷ் செலவழித்துள்ளார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது. 3 ஆயிரம் பேருக்கு தலா 20 கிராம் எடை கொண்ட வெள்ளி விளக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி உட்பட ஒரு விளக்கின் விலை ரூ.5 ஆயிரம் எனில் 3 ஆயிரம் பேருக்கு தனுஷ் ரூ.1.5 கோடி செலவழித்துள்ளது தெரியவந்திருக்கிறது.
பல வருடங்களாக தனுஷின் மாமனார் ரஜினிதான் இப்படி மேடைகளில் தியானம் பற்றி பேசுவார்.. தற்போது தனுசும் அதே ரோட்டில் பயணிப்பதால் மாமனார் ரஜினியை போல ஆன்மீக அரசியல் அவர் கையில் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு தனுஷ் டெல்லி சென்று சில ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைகளை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க