Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடை விழா ரத்து: பொலிவிழந்த கொடைக்கானல்!

Webdunia
வெள்ளி, 1 மே 2020 (13:02 IST)
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆண்டுதோறும் கொடைக்கானலில் நடைபெறும் கோடை விழா ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் மே 3 வரை தளர்வுகளற்ற ஊரடங்கு தொடர்ந்து வருகிறது. இன்று முதல் மே மாதம் தொடங்குவதால் வழக்கமாக இந்த சமயங்கள் கோடை காலத்தையொட்டி சுற்றுலா பயணிகள் அதிகமான சுற்றுலா தளங்களுக்கு செல்வர். முக்கியமாக ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடுவர்.

இதனால் கொடைக்கானலில்  ஆண்டுதோறும் மே மாத தொடக்கத்தில் கோடை விழா கொண்டாடப்படும். அதையொட்டி மலர் கண்காட்சி, படகு போட்டி போன்ற பல நிகழ்ச்சிகளும் நடைபெறும். தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதையும், ஊரடங்கையும் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு கோடை விழா மற்றும் அதன் அனைத்து கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments