தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (அக்டோபர் 12) நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 13ம் தேதி நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 14ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K