Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு மட்டும்தான் லீவு! மற்ற நாட்கள் வேலைநாட்கள்! – அதிர்ச்சியில் மாணவர்கள், ஊழியர்கள்!

Webdunia
திங்கள், 7 அக்டோபர் 2019 (17:37 IST)
இந்த வருடம் தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்ற அறிவிப்பு மாணவர்களையும், அரசு ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வருடத்திற்கான தீபாவளி அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. அதற்கு முதல் நாள் சனிக்கிழமையும், அடுத்த நாள் திங்கட்கிழமையும் சேர்த்து மூன்று நாட்களாக விடுமுறை வழங்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை நாள் என்றும், அதற்கு முன்னால் சனிக்கிழமையும், அடுத்த நாள் திங்கட்கிழமையும் பள்ளிகள், அலுவலகங்களுக்கு வேலை நாட்கள் என செய்தி வெளியாகியிருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி ஒரு நாள் என்றாலும் அதற்கு 2 அல்லது 3 நாட்கள் முன்னதிலிருந்தே அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விடுவது வாடிக்கை. மேலும் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் ஒருநாள் மட்டும் விடுமுறை எடுத்து சென்று வருவது மிகவும் சிக்கலான ஒன்றாகும். இதனால் இந்த தீபாவளி எப்படி அமைய போகிறதோ என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments