Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுகவுடன் இணைந்த தேமுதிக.. எவ்வளவு சீட்?.. பரபர அப்டேட்...

Advertiesment
premalatha

Mahendran

, வியாழன், 19 பிப்ரவரி 2026 (10:55 IST)
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தேமுதிக இதுவரை யாருடனும் கூட்டணி அமைக்காமல் இருந்தது. 20 தொகுதிகள்,  ஒரு ராஜ்ய சபா சீட் என பிரேமலதா டிமாண்ட் வைத்ததால் அதிமுக, திமுக இரண்டுமே அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பின் கொஞ்சம் இறங்கி வந்து 10 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் கேட்டது தேமுதிக. இது தொடர்பாக அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுடனும் பேசிவந்தார் பிரேமலதா.

ஒருபக்கம், காங்கிரஸ் முரண்டு பிடித்து வருவதால் தேமுதிக கூட்டணிகயை கொண்டு வரும் முயற்சியில் திமுக இறங்கியது. அதாவது காங்கிரஸுக்கு செக் வைக்கும் வகையில் தேமுதிகவை திமுக கூட்டணியில் கொண்டுவர முடிவு செய்தது. தற்போது திமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அறிவாலயத்திற்கு பிரேமலதா விஜயகாந்தும், அவரின் சகோதரர் சுதீஷும் வந்திருக்கிறார்கள். அதோடு, அங்கு சில அமைச்சர்களும் கூடியிருக்கிறார்கள். இதன் மூலம் தேமுதிக திமுக கூட்டணியில் இணைவது உறுதியாகியிருக்கிறது.

இந்நிலையில், தேமுதிகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க திமுக சம்மதித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதை தேமுதிகவும் ஏற்றுகொண்டு தற்போது திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிவாலயத்தில் பிரேமலதா!.. திமுக கூட்டணியில் தேமுதிக!.. காங்கிரஸுக்கு செக் வைக்கும் முக ஸ்டாலின்..