Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈயாடிய தேமுதிக அலுவலகம்… வைரலாகும் புகைப்படம்!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (15:04 IST)
தேமுதிக அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் இவர்கள் கேட்பதும் அவர்கள் கொடுப்பதாக சொல்வதுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. மேலும் அதிமுக டெபாசிட் கூட ஒரு தொகுதியிலும் வாங்காது என தேமுதிக துணைச்செயலாளர் சுதீஷ் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

இப்போது திமுகவுடன் கூட்டணியா அல்லது அமமுகவுடன் கூட்டணியா என்ற கேள்வி தேமுதிக முன் உள்ளது. ஆனால் விஜய பிரபாகரன் மற்றும் சுதீஷ் ஆகியோரின் பேச்சுகள் தனியாக நிற்கக் கூட தேமுதிக தயாராக உள்ளது என்பது போல உள்ளது. அவர்களுக்கு இருக்கும் இந்த நம்பிக்கை கட்சி தொண்டர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு இல்லை என்பது போல தெரிகிறது.

அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலாவது குறிப்பிட்ட சீட்களையும் தேர்தல் செலவுக்கு ஒரு அமௌண்ட்டை வாங்கி தேர்தல் செலவு செய்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். இந்நிலையில் தேமுதிக கூட்டணியை விட்டு வந்ததால் பலரும் நம்பிக்கை இழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கட்சி அலுவலகம் கூட இன்று வெறிச்சோடி போய் ஆளில்லாமல் காணப்படுகிறது. இது தொடர்பான ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments