Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழப்பத்தில் திமுக & அதிமுக - செக் வைக்கும் தேமுதிக !

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2019 (09:15 IST)
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஸ்டாலின் விஜயகாந்த் சந்திப்பில் அரசியல் பேசப்பட்டடுதான் உண்மைதான் என விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 7 மக்களவைத் தொகுதிகளையும் 1 மாநிலங்களவை தொகுதியையும் பெற்றுள்ளது. தங்களை விட பலம் குறைந்த கட்சியான பாமக அளவுக்குத் தங்களுக்கும் தொகுதிகள் ஒதுக்கவேண்டுமென அதிமுகவிடம் தேமுதிக கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு அதிமுக அதற்கு ஒத்துக்கொள்ளாததாகத் தெரிகிறது.  தேமுதிகவைக் கூட்டணிக்குள் இழுக்க ஆரம்பத்தில் இருந்து முயற்சி செய்த பாஜக வும் தங்களுக்கான சீட்களைப் பெற்றுக்கொண்டபின் தேமுதிகவை டீலில் விட்டதாகத் தெரிகிறது. இதனால் அதிமுகவுடனானக் கூட்டணி இன்னும் கையெழுத்தாகாமல் இருக்கிறது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது திமுக. பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவர முடியாததால் தேமுதிகவையாவது திமுக கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என திமுக இரண்டாம் மட்டத்தில் இருந்து அழுத்தம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. அதனால்தான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளனர். இதனையடுத்து தேமுதிக திமுக கூட்டணிப் பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பால் தேமுதிக திமுக பக்கம் சாய்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது அதிமுக. அதேப்போல திமுக வும் தேமுதிக தங்கள் பக்கம் வருவது உறுதியா என்ற அச்சத்தில் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு வேண்டிய சீட்களைப் பெற முயன்று வருகிறது தேமுதிக. விஜயகாந்தை சந்தித்து விட்டு வெளியே வந்த ஸ்டாலின் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை எனக் கூறிய நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் ஸ்டாலின் விஜயகாந்த் சந்திப்பில் அரசியல் பேசப்பட்டது உண்மைதான் என கூறியுள்ளார். இதனால் அதிமுக வின் பயம் இன்னும் அதிகமாகியுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் நாங்கள் கேட்கும் தொகுதிகளுடன் யார்முதலில் வருகிறார்களோ அவர்களுடனேக் கூட்டணி எனத் தெளிவாக உணர்த்துகிறது தேமுதிக. தேமுதிக கேட்கும் சீட்களைக் கொடுக்க வேண்டுமென்றால் தங்கள் கட்சிக்காக ஒதுக்கப்பட்ட சீட்களையே விட்டுக்கொடுக்க வேண்டும். அதனால் கட்சி வேட்பாளர்களில் சிலர் சீட்களை பறித்து தேமுதிகவுக்குக் கொடுக்க வேண்டும்.

இதனால் என்ன செய்வது  என்ற குழப்பத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இருக்கட்சிகளும் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

GATE 2025 தேர்வு எப்போது? முழு அட்டவணை இதோ..!

மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்.. புரோக்கராக மாறிய 2வது கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

11 தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரி கேள்வி

தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்.. அன்புமணி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments