Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொள்ளாச்சி விவகாரம்: கனிமொழி தலைமையில் திமுக போராட்டம்!

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (07:25 IST)
கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே சிபிஐ போலீசாரால் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் சமீபத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் அதிமுக நிர்வாகி என்பதும் இவர் கைது செய்யப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து மேலும் சில அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன 
 
குறிப்பாக திமுக இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில் பொள்ளாச்சி விவகாரத்தால் அதிமுகவுக்கு கெட்டபெயர் ஏற்படும் நிலை இருப்பதால் அதிமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது 
 
இந்த நிலையில் இந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்த திமுக திட்டமிட்டுள்ளதாக இந்த விவகாரம் குறித்து ஆர்ப்பாட்டமொன்றை அறிவித்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய புள்ளிகளை கைது செய்ய கோரி திமுக ஆர்ப்பாட்டம் வரும் பத்தாம் தேதி திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற இருவர்? - பஞ்சாபில் அதிர்ச்சி!!

நடந்து செல்லும் பக்தர்களுக்கு அலிபிரி வரை இலவச பஸ்கள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

சபரிமலையில் பக்தர்களுக்கான முன்பதிவு நிறுத்தம்: என்ன காரணம்?

துருக்கியில் இருந்து பாகிஸ்தான் வந்த போர்க்கப்பல்.. இந்தியாவை தாக்கவா?

தங்கம் விலை இன்று சிறிய அளவில் ஏற்றம்.. ஆனால் சரிய வாய்ப்புள்ளதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்