Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தலுக்கு ரூ.31 கோடி செலவு!.. தவெக வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா?..

Advertiesment
sathya bama
2026 சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றவர் சத்தியபாமா. ஆட்சி அமைத்தபின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து விட்டார். இதனால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘2026 சட்டமன்றத் தேர்தலில் நான் ரூ.31 கோடி செலவு செய்தேன்.. அந்த பணம் எனக்கு வராது.. எடப்பாடி பழனிச்சாமி அந்த பணத்தை எனக்கு கொடுக்க மாட்டார்.. இப்போது இடைத்தேர்தலில் பிரச்சாரத்துக்கு வந்தவர்களுக்கு ரூ.14 லட்சம் வரை செலவு செய்திருக்கிறேன்’ என சத்தியபாமா பேசுவதாக ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது. ஆனால் அப்படி நான் எதுவும் பேசவில்லை என்ன சத்தியபாமா மறுத்திருக்கிறார்.

இந்நிலையில், சத்யபாமா மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் திமுக எம்.எல்.ஏ ஆஷ்டின் புகார் அளித்திருக்கிறார். கடந்த தேர்தலில் தாராபுரம் தொகுதியில் ரூ.,31 கோடி செலவு செய்ததாக சத்தியபாமா ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்.. ஆனால் அந்த செலவை அவர் தேர்தல் ஆணையத்திடம் கணக்கு காட்டினாரா.. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.. இந்த தேர்தலில் போட்டியிடவே அவர் தகுதி இல்லாதவர்.. மேலும் அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை அளிக்க வேண்டும்’ எனவும் அந்த புகாரியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றிப் பயண திட்டத்தால் பஸ் காத்து வாங்குது!. புலம்பி வீடியோ போட்ட தனியார் பேருந்து ஓட்டுனர்..