ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி அருகே மக்கள் கிராம சபைப்க் கூட்டத்தில் பங்கேற்ற திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் கூட்டணியில் மற்றக் கட்சிகள் அணிசேர்ந்துள்ளன. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் திமுக ஆட்சி அமைத்ததும் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பள்ளேறி, கொண்டக்குப்பம், மற்றும் மருதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கிராம மக்கள் சபைக் கூட்டத்தில் திமுக கட்சியின் பொதுச்செயலாளார் துரைமுருகன் பங்கேற்றிருந்தார்.
அப்போது, கூட்டம் முடிந்து செல்லவிருந்த துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் அவர் உடனடியாக அப்போல்லோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே திமுக கட்சியின் பொதுச்செயலாளரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான துரைமுருகன் மூச்சுத்திணறல் காரணமாக திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விரையில் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.