தமிழகத்தில் நேற்று 38 மக்களவை தொகுதிகளின் தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதத்தை விட சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குச்சதவீதம் அதிகரித்திருப்பது யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம் என்பது தேர்தல் முடிவுக்கு பின்னரே தெரிய வரும்
இந்த நிலையில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மே.19-ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு ஐ.பெரியசாமி அவர்களும், ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு கே.என்.நேரு அவர்களும், அரவக்குறிச்சி தொகுதிக்கு க.பொன்முடி அவர்களும், சூலூர் தொகுதிக்கு எ.வ.வேலு அவர்களும் பொறுப்பாளர்களாக செயல்படுவார்கள் என்று தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்