Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணியில்....காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்க முடிவு???

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (19:05 IST)
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள்  வெளியாகிறது.
 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 
இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லீக் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சிகள் நேற்று 3 , 2 தொகுதிகள் பெற்ற நிலையில், இன்று காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
 
இப்பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதேபோல் விரைவில் விசிக கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரியவரும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments