Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2016 (10:11 IST)
ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை திமுக சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. 


 
 
கடந்த 8ம் தேதி ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் மக்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வரும் 24ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். 
 
அதன்படி இன்று (24ம் தேதி) மாலை 4 மணி முதல் 5 மணி வரை நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டத்தை திமுகவினர் நடத்துகிறார்கள். 
சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் நந்தனத்தில் தொடங்கி மீனம்பாக்கம் வரை மனிதசங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் பாரிமுனையிலிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மனிதசங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் விஜய்யால் நிச்சயம் தாக்கம் இருக்கும்: அண்ணாமலை கருத்தால் பரபரப்பு..!

நயினார் நாகேந்திரன் மகனுக்கு பாஜகவில் மாநில அளவில் பதவி.. பாஜகவிலும் வாரிசு அரசியலா?

லாட்டரி விற்பனைக்கு போலீசாரே உடந்தையாக இருந்த கொடுமை: 6 காவலர்கள் சஸ்பெண்ட்

பரந்தூர் விமான நிலையம் அருகே 2 சிட்கோ தொழிற்பேட்டைகள்: 600 ஏக்கரில் அமைக்க திட்டம்..!

எனது மனதின் குரலாக பேசியுள்ளார்.. செங்கோட்டையன் பேட்டி குறித்து ஓபிஎஸ் கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments