Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது வேண்டுகோள் இல்லை; கட்டளை! ஸ்டாலின் அதிரடியால் திமுகவினர் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (08:02 IST)
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பிக்கள் தொகுதி மக்களுக்கு என்னென்ன செய்தோம் என்பது குறித்த அறிக்கையை தலைமைக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்ப வேண்டும் என்றும் இது என் வேண்டுகோள் அல்ல, கட்டளை என்றும் திமுக தலைவர் மு.க..ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது இந்த அதிரடியால் திமுக எம்பிக்கள் ஆடிப்போயுள்ளனர்.
 
இதுகுறித்து மு.க.,ஸ்டாலின் பதிவு செய்துள்ள ஒரு டுவீட்டில், 'திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் தங்கள் தொகுதி மக்கள் பிரச்னைகள் குறித்த அறிக்கையை என்னிடம் வழங்க வேண்டும். இது வேண்டுகோள் இல்லை; கட்டளை!” என்று கூறியுள்ளார்.
 
பொதுமக்கள் நம்மை நம்பி 37 தொகுதிகளை ஒப்படைத்துள்ளனர். மத்திய அரசில் பங்கு பெறாவிட்டாலும் ஒரு எம்பி என்ற முறையில் தொகுதிக்கு என்னென்ன பணிகள் செய்ய முடியுமோ அதை செய்து மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்றும் அப்போதுதான் வரும் சட்டமன்ற தேர்தலில் மக்களுக்கு நம்மீது நம்பிக்கை எழும் என்றும் அவர் கூறியுள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன
 
இதனை தொடர்ந்து செய்தால் நமக்கு வாக்களிக்காத மக்கள் கூட, நமக்கு வாக்களிக்க தவறிவிட்டோமே என்ற எண்ணும் சூழல் ஏற்படும் என்றும், அது சட்டமன்ற தேர்தலுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும் என்றும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments