Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக நிர்வாகி வெட்டிப் படுகொலை! – திருநெல்வேலியில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 30 ஜனவரி 2022 (13:09 IST)
திருநெல்வேலியில் திமுக நிர்வாகி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை தெற்கு பஜாரை சேர்ந்தவர் பொன்னுதாஸ். 38வது வார்டு திமுக செயலாளராக இருந்து வரும் இவர் பாளையங்கோட்டையில் மதுபான பார் ஒன்றையும் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதில் போட்டியிட பொன்னுதாஸின் தாயார் பெயரில் விருப்பமனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுக்கூடத்தை மூடிவிட்டு வீடு திரும்பிய பொன்னுதாஸை அவரது வீட்டின் அருகே மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments