Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விறு விறு வேகத்தில் நேர்காணல்: அடித்து நகர்த்தும் ஸ்டாலின் அண்ட் கோ!

DMK
Webdunia
புதன், 3 மார்ச் 2021 (08:30 IST)
திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் துவங்கியது. 

 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர்  டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
 
திமுகவின் விருப்ப மனு கடந்த 17 ஆம் தேதி துவங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற்றது, இதில் 8388 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன, இதில் 7967 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. சுமார் 7,000 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டு அழைக்கப்பட்டு உள்ளனர். 
 
அதிகபட்சமாக 7 நாட்கள் வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் நேற்று கன்னியாகுமரி கிழக்கு -மேற்கு, தூத்துக்குடி வடக்கு - தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, மத்திய தென்காசி வடக்கு - தெற்கு மற்றும் ராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.  
 
நேற்று மாலை விருதுநகர் வடக்கு - தெற்கு, சிவகங்கை, தேனி வடக்கு -தெற்கு மற்றும் திண்டுக்கல் கிழக்கு - மேற்கு மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.  
 
அந்த வகையில் இன்று மதுரை, நீலகிரி, ஈரோடு, கோவை மற்றும் கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடைப்பெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments