Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி.. வித்தியாசம் சுமார் 3 லட்சம் வாக்குகள்..!

Mahendran
செவ்வாய், 4 ஜூன் 2024 (16:39 IST)
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றுள்ளதாக சற்றுமுன் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் வாக்கு வித்தியாசம் சுமார் மூன்று லட்சம் என்று கூறப்படுகிறது. 
 
நாடாளுமன்ற தேர்தலில் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தூத்துக்குடி தொகுதியின் முடிவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழி 426617  வாக்குகள் பெற்றுள்ளார்.
 
அவரை அடுத்து அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி என்பவர் 123214  வாக்குகள் பெற்றுள்ளார் என்பதும் இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் 303403 என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 101065  வாக்குகள் பெற்றுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் சீலன் 93869 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments