Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இல்லாத டுபாக்கூர் நிறுவனத்தை உருவாக்கி டென்டர்: ஆளும் அரசை கிழிக்கும் உதயநிதி!

இல்லாத டுபாக்கூர் நிறுவனத்தை உருவாக்கி டென்டர்: ஆளும் அரசை கிழிக்கும் உதயநிதி!
, புதன், 2 செப்டம்பர் 2020 (11:32 IST)
ரேஷனின் வழங்கப்படும் தரமற்ற மாஸ்க் குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் விமர்சனம். 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, ரேஷன் கடைகளில் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மக்கள் பொது இடங்களுக்கு சென்றால் பாதுகாப்பாக இருக்க முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
இதையடுத்து தமிழக அரசே இலவசமாக மக்களுக்கு மாஸ்க்குகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன் படி ரேஷன் கடைகளில் மாஸ்க்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு நபருக்கு 2 மாஸ்க்குகள் என்ற விகிதத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மாஸ்க்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
 
இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்றில் ஏழைகளுக்கு ரேஷனில் வழங்கும் இலவச மாஸ்க் வாங்கியதில் பல கோசி முறைகேடு, தரமற்றது, விலை குறைந்தது என தகவல்கள். முன்னணி நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்காததால் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு சப்ளை ஆர்டர், முதற்கட்ட சப்ளை கூட வழங்க முடியாமல் வருவாய்துறை திணறல் என் செய்தி வெளியாகியுள்ளது.
 
இதனை குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், இல்லாத நிறுவனத்தை உருவாக்கி டென்டர் விட்டதால் ரேஷன் கடைக்கு இன்னும் இலவச முகக்கவசம் வரவில்லை. வருவதும் பேப்பர் அளவில் தரமற்று உள்ளதாகச் செய்தி வருகிறது. எதைத் தொடங்கினாலும் ஊழல் முட்டுச்சந்தில் கொண்டு போய் நிறுத்தும் அடிமைகளின் கொள்ளைவெறி உயிர்காக்கும் மாஸ்கிலும் தொடருவது துரோகம் என குறிப்பிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீக்குளித்த பெண்ணை காப்பாற்றாமல் வீடியோ எடுத்தவர் கைது: பெரும் பரபரப்பு