Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அப்போலோவில் ஜெ.வை சசிகலா கூட பார்க்கவில்லை - தினகரன் புது விளக்கம்

அப்போலோவில் ஜெ.வை சசிகலா கூட பார்க்கவில்லை - தினகரன் புது விளக்கம்
, சனி, 23 செப்டம்பர் 2017 (12:27 IST)
உடல் நலக்குறைபாடு காரணமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை பார்க்க சசிகலாவை கூட மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என தினகரன் புதிய விளக்கம் கொடுத்துள்ளார்.


 

 
மதுரை பழங்காநத்தத்தில் நேற்று இரவு நடந்த அறிஞர் அண்ணா பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பல உண்மைகளை போட்டுடைத்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரை சந்திக்க ஆளுநர், மத்திய அமைச்சர்கள் உட்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு காரணம் என்ன என்பதை திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். 
 
ஜெயலலிதாவை சந்திக்க வருபவர்கள் அனைவரும் ஜெயலலிதா இருக்கும் அறைக்கே செல்லவில்லை. யாரையும் சசிகலா அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா அறைக்கு சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மட்டுமே செல்ல முடிந்தது. 

webdunia

 

 
ஒருவேளை ஜெயலலிதாவை நாங்கள் நேரில் சந்தித்தால் தான் எப்படி கொல்லப்படுகிறோம் என அவர் சொல்லிவிடுவார் என யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களை சந்தித்து பேசுவதற்காக நேற்று கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு தினகரன் சென்றார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது “அக்டோபர் 1ம் தேதிக்கு பின் தொற்று நோய் ஏற்படும் என்பதால் ஜெயலலிதாவை பார்க்க சசிகலாவையே அனுமதிக்கவில்லை. பதவிக்காகவும், பயம் காரணமாகவும் திண்டுக்கல் சீனிவாசன் மாறி மாறி பேசுகிறார்” என தினகரன் கூறினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிரியரின் செயலால் தற்கொலை செய்த 5-ஆம் வகுப்பு மாணவனின் உருக்கமான கடிதம்!