Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த உதவியும் செய்யாத அரசு தமிழ்நாட்டுக்கு தேவையா? எடப்பாடி பழனிசாமி

Sinoj
செவ்வாய், 26 மார்ச் 2024 (20:41 IST)
மக்களுக்கு துன்பம் ஏற்படும் போது ஓடோடி வந்து உதவி செய்திட வேண்டும். ஓட்டுப்போட்டு எந்த ஒரு  உதவியும் செய்யாத அரசு தமிழ் நாட்டிற்கு தேவையா?  என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்த நிலையில்,  அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. சமீபத்தில் தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகி வேட்பாளர் பட்டியல் வெளியானது.
 
இந்த நிலையில், தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து,  அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
அவர் கூறியதாவது: 

மக்களுக்கு துன்பம் ஏற்படும் போது ஓடோடி வந்து உதவி செய்திட வேண்டும். ஓட்டுப்போட்டு எந்த ஒரு  உதவியும் செய்யாத அரசு தமிழ் நாட்டிற்கு தேவையா? அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
 
தூத்துக்குடி பக்கிள் ஓடை 80 சதவீதம் வேலைகளை அதிமுக ஆட்சியில் செய்து முடித்திருந்தோம். மக்களுக்காக பக்கிள் ஓடை பணியை திமுக அரசு முடிக்கவில்லை. அது முடிக்கப்பட்டிருந்தால், தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்காது என்று கூறினார்.மேலும், மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பது தான் அதிமுகவின் லட்சியம். டிசம்பரில் பெய்த மழையின்போது என்னால் முடிந்த  நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கினேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments