Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக முதல்வருக்கு ’அந்த துணிச்சல் ’ உள்ளதா ? தமிழக விவசாயிகள் சங்கம்

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (19:19 IST)
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை தொடங்க மத்திய அரசு முழு வீச்சில் தயாராகிவருகிறது. இதற்காக மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது அனைவரும் அறிந்ததுதான். டெல்டா மாவட்டங்களில் இருந்து இந்த திட்டத்தை செயல்படுத்தபோவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் ஹைட்ரோ, கார்பன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு மக்களின் இத்தனை குரல்களைக் கேட்டதாகத் தெரியவில்லை.
 
இந்நிலையில் தமிழக அரசு, மக்கள் விரும்பாத திட்டங்களைச் செயல்படுத்த மாட்டோம் என்று அவ்வப்போது கூறிவருகிறது. ஆனால் மக்கள் பாடு படு திண்டாட்டமாக உள்ளது. 
 
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  விழுப்புரம் மாவட்ட மக்கள் வரும் 12 ஆம்தேதி மரக்காணம் துவங்கி ராமேஸ்வரம் வரையில் 596 கி மிட்டர் தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளனர்.இதில் பல அரசியல் கட்சிகள் கலந்துகொள்ளவுள்ளன.
 
இந்நிலையில் திருவாரூரில் நடைபெற்ற விவசாயிகள் சங்க கூட்டத்தில் கலந்துகொண்ட  தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம் கூறியதாவது :
 
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தினால் மனிதனின் ஆதார தேவைகளாக உள்ளா நிலம் நீர் உணவு ஆகியவை இல்லாமல் போகுமென எச்சரிக்கை விடுத்தார்.மேலும் மத்திய அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆயத்தமாகிவருகிறது. ஆனால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி : புதுச்சேரியில் இத்திட்டத்தைச் செயல்படுத்த விடமாட்டோமென தெரிவித்து, ராணுவமே வந்தாலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தவிட மாட்டோம் என்று கூறியுள்ளார்.
 
நம் தமிழக முதல்வர் இதுகுறித்து பேசி, மத்திய அரசுக்கு எதிராக அறிவிப்பு வெளியிடுவாரா அந்த துணிச்சல் முதல்வருக்கு உள்ளதா ? என்று தமிழக முதல்வருக்கு சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments