Webdunia - Bharat's app for daily news and videos

Install App

35 வயசாகியும் பொண்ணு கிடைக்கல.. சண்டை போட்ட மகனை அடித்துக் கொன்ற தாய், பெரியம்மா! – திருவண்ணாமலையில் அதிர்ச்சி சம்பவம்!

Prasanth Karthick
ஞாயிறு, 5 மே 2024 (09:55 IST)
திருவண்ணாமலையில் தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என தொடர்ந்து சண்டையிட்டு வந்த மகனை தாயே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருவண்ணாமலை வந்தவாசியில் உள்ள தென்னாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவருக்கு முனியம்மாள், ருக்மணி என்று இரு மனைவிகள் உள்ளனர். சகோதரிகளான முனியம்மாள், ருக்மணிக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகள் முன்னாள் தெய்வசிகாமணி இறந்த நிலையில் முனியம்மாள் தனது மகன்களோடு சென்னை சென்றுவிட, ருக்மணி தனது மகன்களோடு தென்னாங்கூரிலேயே வாழ்ந்து வந்துள்ளார்.

ருக்மணியின் இளைய மகன் சுரேஷுக்கு 35 வயதாகிவிட்ட நிலையில் இன்னும் திருமணமாகவில்லை. தச்சர் வேலை செய்யும் சுரேஷ் இதனால் அடிக்கடி தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தொடர்ந்து தனது தாயிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் தனக்கு திருமணமாகாததால் விரக்தியடைந்த சுரேஷ் குடிக்கு அடிமையாகியுள்ளார். இதனால் தினம்தோறும் குடித்துவிட்டு வந்து தனது தாயிடமும் சண்டை போட்டு வந்துள்ளார்.

ALSO READ: தனக்குத்தானே பிரசவம்.. குழந்தையின் கால்களை வெட்டி கொன்ற செவிலியர் கைது

சம்பவத்தன்று சென்னையில் இருந்து முனியம்மாள் தனது தங்கை ருக்மினியை பார்க்க தென்னாங்கூர் வந்திருந்துள்ளார். அன்று சுரேஷ் குடித்துவிட்டு வந்து தனது தாய் ருக்மிணியிடமும், பெரியம்மாள் முனியம்மாளிடமும் சண்டை போட்டுள்ளார். இதனால் முனிய்ம்மாளும், ருக்மிணியும் சேர்த்து சுரேஷை கட்டையால் தாக்கியதில் மயங்கி ரத்த வெள்ளத்தில் சரிந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments