Daily Horoscope
✕

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ: அதிமுகவில் இணைந்ததால் பரபரப்பு!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (11:30 IST)
பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ மருத்துவர் சரவணன் திடீரென அதிமுகவில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்பது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏ மருத்துவர் சரவணன் திடீரென பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகினார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.
 
இந்த நிலையில் தற்போது அவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ’முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இணைந்துள்ளேன். அதிமுகவின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்’ என்று தெரிவித்துள்ளார். 
 
நேற்று பாஜகவிலிருந்து காயத்ரி ரகுராம் விலகிய நிலையில் இன்று சரவணன் விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருளால் மரணம் ஏற்பட்டால் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! - டிஜிபி கடும் எச்சரிக்கை...

ரத்தீஷுக்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்!.. பிடிபடுவாரா?...

புது வீடு.. கடன்.. கதறி அழுத மீனாட்சி!.. கொள்ளையடித்த நிஷாந்த்.. விசாரணையில் தகவல்...

மனிதர்களால் 150 வருஷம் வாழ முடியுமா? - தீவிர ஆராய்ச்சியில் ரஷ்யா....

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை!.. யார் இந்த மீனாட்சி நாச்சியார்?..

அடுத்த கட்டுரையில்
Show comments