Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில்'’ dream 11’’ ஆன்லைன் விளையாட்டிற்கு தடை !!

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2021 (17:02 IST)
தமிழகத்தில் டிரீம் -11 (dream 11) என்ற ஆன்லைன் விளையாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் ஆன்லைன் சூதாட்ட மோகம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பலர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட செயலிகள், வலைதளங்களை தடை செய்ய வேண்டும் என தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் விதமாக நவம்பர் மாதம் 20 ஆம் தேதி சட்டமன்றத்தில் சட்டமியற்றப்பட்டது.

இதையடுத்து பிப்ரவரி 4 ஆம் தேதி கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அந்த தடை மசோதாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார். இந்த தடையை மீறி சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு

ரூ.5,000 அபராதம், 6 மாத சிறை தண்டனை வழங்கவும், சூதாட்டத்தை நடத்துபவர்களுக்கு ரூ.10,000 அபராதமும் 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் எனவும் சட்டத்திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஸ்பான்சர் செய்த டிரீம் -11 என்ற ஆன்லைன் சூதாட்டத்திற்கு தற்போது தமிழக அரசு தடை விதித்துள்ளது. நேற்று சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து தமிழக அரசு dream 11 க்கு தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

விஜய் அரசியல் வருகையால் தேமுதிகவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தொடங்கியது பேச்சுவார்த்தை..!

ஆடை அணியாமல் திருமணம் செய்த 29 ஜோடிகள்.. வினோத நிகழ்வு..!

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments