Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி அரசை காப்பாற்ற சபாநாயகர் செய்த ஜனநாயக படுகொலை - துரைமுருகன் விளாசல்

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (11:38 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசை காப்பற்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்து சபாநாயர் செய்த நடவடிக்கை  ஜனநாயக படுகொலை என துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இன்று நடவடிக்கை எடுத்துள்ளார். இந்திய அரசியலைம்பு சட்டம் 10வது அட்டவணைப்படி, கட்சி மாறுதல் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தனபால் அறிவித்துள்ளார்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் துரை முருகன் “ சபாநாயகர் தனபால் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது. அவர் ஒரு தலை பட்சமாகவே இந்த முடிவை எடுத்துள்ளார். எம்.எல்.ஏக்களின் மொத்த ஆதரவை காட்டித்தான் ஒருவர் ஆட்சி அமைக்க வேண்டும். அதை விட்டு விட்டு, 18 பேரை வீட்டிற்கு அனுப்பி விட்டு மெஜாரிட்டி நிரூபிப்பது பேடித்தனம். ஜனநாயகத்திற்கு புறம்பான செயல். இது ஒரு ஜனநாயக படுகொலை. இதற்காக வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன்” என அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments