Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்பரால், அசோகனால் முடியாதது அமித்ஷாவினால் முடியுமா? துரைமுருகன் கேள்வி

Webdunia
ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (19:28 IST)
இன்று திருவண்ணாமலையில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு ஒரே நாடு ஒரே மொழி என்ற அமித்ஷாவின் கொள்கையை எதிர்த்து ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது:
 
 
எந்த காலத்தில் ஒரே மொழி ஒரு நாட்டை ஆண்டது? எங்களை மிரட்டி பார்க்கின்றீர்களா ? இது சிறுத்தையின் கூட்டம் ஜாக்கிரதை? தமிழகத்தில் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய மண் இந்த திருவண்ணாமலை மண். இந்த மண்ணில் வைத்து கூறுகிறேன், இந்தியை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம். ஒரே மொழி இருந்தால் ஒரு நாடாகிவிடுமா? ஒரே மொழியைவா கனடாவும், மலேசியாவும் சிங்கப்பூரும், சுவிட்சர்லாந்தும் ஏற்றுக்கொண்டதா? அப்படியென்றால் அவர்கள் என்ன பைத்தியக்காரர்களா? 
 
 
ஒரே மொழியை நாடு முழுவதும் உருவாக்க அசோகரால் முடியவில்லை, அக்பரால் முடியவில்லை, ஆனால் அமித்ஷா நினைக்கின்றார். நினைப்பதில் தவறில்லை. ஆனால் நாங்கள் நடக்க விடமாட்டோம். ஒரு மொழிதான் ஒரு நாட்டில் இருக்க வேண்டும் என்றால் மற்ற மொழிகள் அந்த மொழிக்கு அடிமையாக இருக்க வேண்டிய நிலை வரும். இதனை திமுக எந்த நாளும் ஏற்றுக்கொள்ளாது என்று துரைமுருகன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments