Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷ்மா, அருண்ஜெட்லி விவகாரம்: உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (21:51 IST)
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண்ஜெட்லி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். அவரது பிரச்சாரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் பேசியபோது மோடியின் டார்ச்சர் காரணமாக தான் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் இறந்தனர் என்று கூறினார் அதன் பிறகு அவர் அதற்கு விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் உதயநிதியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜகவினர் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் பரப்புரையின் போது சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண்ஜெட்லி குறித்த பேச்சுக்கு உதயநிதி விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments