அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் கைது செய்த நிலையில் அவர் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பினர் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்
இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில் தற்போது அமலாக்கத்துறை இன்று பதில் மனு தாக்கல் செய்து உள்ளது. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மனு வழக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.