Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவுக்கே அதிக வாய்ப்பு – வெளியானது அடுத்த கருத்துக்கணிப்பு !

Webdunia
புதன், 22 மே 2019 (11:32 IST)
தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பான இந்து நாளிதழின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்தது. அதையடுத்து மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.  இப்போது இந்த இடைத்தேர்தல்களுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் நடத்தி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் திமுகவுக்கு 14 இடங்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து இப்போது இந்து நாளிதழ் தாங்கள் நடத்தியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் இந்திய அளவில் பாஜக கூட்டணிக்கு 42 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 30 சதவீத வாக்குகளே கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது.

அதேப்போல தமிழக அளவில் திமுக கூட்டணிக் கட்சிகள் அதிகபட்சமாக 47 சதவீத வாக்குகளைக் கைப்பற்றும் எனவும் அதிமுக 35 % மற்றும் அமமுக 9 % வாக்குகளைக் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments