Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் சிறை செல்லும் வரை அவர் இருப்பாரா என்ன? யார் அந்த அவர்?

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (17:59 IST)
திமுக தலைவர் ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுக அமைச்சர் அனைவரும் அடுத்த வினாடியே சிறைக்கு செல்வார் என கூறியிருந்தார். இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்துள்ளார். 

 
எடப்பாடி பழனிச்சாமி கூறியது பின்வருமாறு, திமுக ஆட்சிக்கு வரும் என்று ஸ்டாலின் கனவு காண்கிறார். அது நடக்காது. ஆனால் நாங்கள் சிறை செல்லும் வரை மு.க.ஸ்டாலின் மற்றும் அவர்களுடைய முன்னாள் அமைச்சர்களும் வெளியில் இருப்பார்களா? என்று பாருங்கள்.
 
திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டதால் அவர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வழக்குகளை மறைப்பதற்காக அதிமுக அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் ஸ்டாலின். 
 
எனவே ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்களே தவிர, அதிமுக அமைச்சர்கள் பற்றி அவர் தெரிவித்துள்ள யூகங்கள் ஒரு போதும் வெற்றி பெறாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments