Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா, தினகரன், ஓபிஎஸ் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர வாய்ப்பே இல்லை: ஈபிஎஸ் உறுதி

Siva
திங்கள், 24 மார்ச் 2025 (08:13 IST)
சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியிலுள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சசிகலா, டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அ.தி.மு.க.வில் மீண்டும் இடமில்லை என உறுதியாக கூறினார்.

மேலும் "இந்த விவகாரம் குறித்து பலமுறை நாம் எடுத்து கூறியிருக்கிறோம். அ.தி.மு.க. தற்போது உறுதியாக செயல்பட்டு வருகிறது. ஆனால், நீங்கள் நினைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப இதையே கேட்கிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் அந்த நபர்கள் மீண்டும் கட்சியில் சேர வாய்ப்பு இல்லை.

பா.ம.க.-வுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி கேட்கப்பட்டிருக்கிறதா என்று கேட்கிறீர்கள். ஆனால், இன்னும் அந்தத் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, இப்போது அதைப் பற்றிக் கூறுவது சரியில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அதற்கான முடிவுகளை அறிவிப்போம்.

த.வா.க. தலைவர் வேல்முருகன் எங்களை தொடர்பு கொள்ளவில்லை; அதேபோல், நாங்களும் அவரை அணுகவில்லை. கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு வரும். கொள்கை என்பது நிலையானது; ஆனால், கூட்டணி என்பது அரசியல் சூழ்நிலைக்கேற்ப அமைக்கப்படும் ஒரு யுத்தக்கள அமைப்பு. வாக்குகள் பங்காகிச் செல்லாமல், அதிக ஆதரவை பெறவே கூட்டணிகள் உருவாக்கப்படுகின்றன. எந்த கூட்டணியும் நிரந்தரமானதல்ல.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவசர அவசரமாக ஸ்ரீநகர் சென்ற ராணுவ தலைமை தளபதி.. அடுத்த என்ன நடக்கப் போகிறது?

எல்லையில் இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கி சூடு.. போர் தொடங்கிவிட்டதா?

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி! டூர் ப்ளானை கேன்சல் செய்யும் ஆயிரக்கணக்கான மக்கள்!

பஹல்காம் தாக்குதல் தேர்தல் நேர அரசியலா? பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அசாம் எம்.எல்.ஏ கைது!

சீறும் ஏவுகணைகள்.. பாயும் ரஃபேல் விமானங்கள்! இந்திய ராணுவம் தீவிர பயிற்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments