ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வரவேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் வந்து மாணவர்கள் சேர்க்கை குறித்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் அதாவது வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு தினமும் வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் பாடங்களில் இருந்து தேர்வுகள் நடத்துதல், மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்தல், மாணவர் சேர்க்கை பணிகள் ஆகியவை இருப்பதால் அனைத்து ஆசிரியர்களும் வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளுக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது