Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (20:36 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!
திமுக அதிமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளை முந்திக்கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் என்பது தெரிந்ததே 
நேற்று மாலை மதுரையில் தொடங்கிய தேர்தல் பிரச்சாரம் இன்று உசிலம்பட்டியில் நடைபெற்று வருகிறது. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எழுச்சி பெற்று அவரது கட்சிக்கு ஆதரவு கொடுத்து வருவதை காண முடிகிறது
 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக சற்றுமுன் உறுதிசெய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது
 
ஏற்கனவே கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இதே சின்னம் ஒதுக்கியதை அடுத்து வரும் சட்டமன்றத்திலும் அக்கட்சிக்கு இந்த சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மக்கள் மத்தியில் அறிமுகமான சின்னம் என்பதால் கமல் கட்சிக்கு வரும் தேர்தலில் சின்னத்தை பிரபலப்படுத்துவது எந்தவித பிரச்சனையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதே போல் தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments