தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பெரும்பாலும் 8 முதல் 12 மணிநேரம் வரை நின்றுகொண்டே பணியாற்றும் நிலை இருக்கிறது.
இந்நிலையில் இனிமேல் கடைகள் மற்றும் வணி வளாகங்கள், ஜவுளிக்கடைகளில் நின்று பணியாற்றும் ஊழியர்களுக்குக் கட்டாயம் இருக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்ற சட்ட முன்வடிவை தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அதனால் இனிமேல் கடைகளில் கால்கடுக்க நெடுநேரம் நின்று பணியாற்றும் ஊழியர்களுக்கு இருக்கைகள் சாத்தியமாகும் நிலை உருவாகியுள்ளது.